Department of Tamil Activities

தமிழ்த்துறை

ஆண்டு நிகழ்வுகள்

2019-2020

வ.எண்

நாள்

நிகழ்வுகள்

01

17.06.2019

இளங்கலை முதலாமாண்டு மாணாக்கர் அனைவருக்கும் அடித்தளப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

02

17.06.2019

இளங்கலை முதலாமாண்டு மாணாக்கருக்குத் திறனறிவுத்தேர்வு நடத்தப்பட்டது.

03

09.07.2019

இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணாக்கருக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி, முதன்மை நூலகர், திரு. ச. அருள் ஆரோக்கியராஜ், எம்.ஏ., எம்.எல்.ஐ.எஸ்;. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

04

 

23.07.2019

 

அதியன் தமிழ் மன்றம் தொடக்கம் மற்றும் முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி, அரசு கலைக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் கு. சிவபிகாசம், எம்.ஏ., எம்.பிஃல்., பி.எச்.டி., அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

05

 

07.08.2019

 

இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மற்றும் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணாக்கருக்குப் பல்திறன் வளர்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி, ஆங்கிலத்துறை, உதவிப் பேராசிரியர், திருமதி. க. லீலாவதி, எம்.ஏ., எம்.பிஃல்., அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

06

09.08.2019

இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மற்றும் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணாக்கருக்குப்பல்திறன் வளர்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி, ஆங்கிலத்துறை, உதவிப் பேராசிரியர், திருமதி. க. லீலாவதி, எம்.ஏ., எம்.பிஃல்., அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

07

 

10.08.2019

தமிழ் வளர்ச்சித்துறைச் சார்பாகத் தருமபுரி, அரசு கலைக் கல்லூரியில்  நடைபெற்ற மாவட்ட அளவிலானக் கவிதைப் போட்டியில், தொன் போஸ்கோ கல்லூரி, வணிக நிர்வாகவியல் மூன்றாமாண்டு மாணவர் மா. விக்னேஷ் மூன்றாம் பரிசும், பேச்சுப் போட்டியில் வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி த. சிவசங்கரி மூன்றாம் பரிசும் பெற்றனர். இப்பரிசினை தருமபுரி கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் திருமதி. சகுந்தலா அவர்கள் வழங்கினார்.

08

 

14.08.2019

அதியன் தமிழ் மன்றம் சார்பில், வியாழன் வட்டம் – கவியரங்கம் நடைபெற்றது. தொன் போஸ்கோ கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் க. சங்கர் அவர்கள் தலைமையேற்று இதனை நடத்தினார். இக்கவியரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

 

09

 

18.09.2019

 

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திற்கு இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மற்றும் முதுகலைத் தமிழ் மாணாக்கர் கல்வெட்டுக் கள ஆய்வுப் பணிக்குச் சென்றனர்.

10

19.09.2019

அதியன் தமிழ் மன்றம், வியாழன் வட்டம் சார்பில் "தமிழும் தன்னம்பிக்கையும்”  என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி, நாட்டு நலப்பணித் திட்ட மண்டல அலுவலர் திரு. ப. இளங்கோ, எம்.ஏ., பி.எட்., டி.எம்.இ., அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

 

Get in touch with us!

Visitor Count: web
analytics

DBC Success

Specialized Seminars

Site Map