Department of Tamil

 

துறை வரலாறு

தருமபுரி மாவட்டத்தில் வெற்றிகரமாக 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொன்போஸ்கோ கல்லூரியில், முதுகலைத் தமிழ்த்துறை மாணவர் தம் தமிழாற்றலை வளர்ப்பதில் தனித்த இடம் பெற்றுள்ளனர்.  இத்துறையில் 2015 ஆம் ஆண்டு முதல் கணினிச் சான்றிதழ் கல்வி மற்றும் தமிழ் தட்டச்சுப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள், நுண்கலை மன்றம் வாயிலாக 2015 ஆம் கல்வியாண்டு முதல் இன்று வரை மாணவர்களுக்குக் கல்வியோடு சேர்த்து, கரகம், பறையாட்டம், புலியாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், சக்கையாட்டம், கூத்துக் கலைகள் என பல்வேறு பயிற்சியளித்து வருகின்றன.

முதுகலைத்தமிழ் பாடப்பரிவு (எம்.ஏ.) 2015 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் தனித்துவம் பெற்ற போராசிரியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

துறை நோக்கம்

அதியன் வாழ்ந்த இம்மண்ணில் தமிழ்மொழியை வளர்த்தெடுக்கவும், பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களையும், தற்கால இலக்கியங்களையும், நாட்டுப்புறவியல் மொழிப்பெயர்ப்பு போன்ற தமிழ் சார்ந்த பிற துறை அறிவையும் மாணவர்கள் ஆழ்ந்து கற்க வேண்டும் என்பதும்,  தாம் பெற்ற பரந்த கல்வியறிவின் துணைக்கொண்டு நல்ல வேலைவாய்ப்பினைப் பெறவேண்டும் என்பதும் துறையின் நோக்கமாகும்.

துறை திட்டம்  

 • கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களுக்குப் பண்பாட்டுக் கலாச்சாரத்தை அறிவுறுத்தும் விதத்தில் இம்மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுதல்.
 • இன்றைய போட்டி நிறைந்த உலகில் மொழித்துறையில் பயில்வதற்கு வாய்ப்பு வழங்குதல்.
 • மொழிப்பாடத்தின் வாயிலாக தன்னாளுமையை வளர்த்தல்.
 • மத்திய-மாநில அரசு சார்ந்தப் போட்டிகளில் வெற்றிப் பெற வழிவகை செய்தல்.
 • கணினிப் பயன்பாட்டுடன் கூடியக் கல்வி வழங்குதல்.
 • மாற்று நாடக இயக்கத்தின் வாயிலாக மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அடையாளம் காணுதல்.
 • ஊடக நிகழ்ச்சிகளில் பங்குபெற பயிற்சியளித்தல்.
 • வட்டார வாழ்வியல் தொடர்பானக் களப்பணிகள் மேற்கொள்ளச் செய்தல்.
 • பேராசிரியர்கான தேசியத் தகுதித் தேர்வு (NET, TNSET) எழுதுவற்குப் பயிற்சி அளித்தல்.
   

துறைப்  பேராசிரியர்கள்

01.06.2007 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியின் தமிழ்த்துறையில் நான்கு பருவங்களுக்குரிய மொழிப்பாடம் இளங்கலை மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் நான்கு தமிழாசிரியர்களைக் கொண்டுச் செயல்பட்டு வந்த இத்துறையில்,  இன்று நீண்ட காலம் பணி அனுபவம் பெற்;ற பத்துப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முனைவர் பட்டம் பெற்ற நான்கு பேராசிரியர்களும், தகுதித் தேர்வில் (NET, TNSET) தேர்ச்சிப் பெற்ற ஐந்து பேராசிரியர்களும், ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற நான்கு பேராசிரியர்களும் என பதினொரு பேராசிரியர்கள்  பணியாற்றி வருவது சிறப்பு. இப்பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றதுடன் அமையாது, வரலாறு, இதழியல், மொழியியல், கல்வியியல் போன்ற பிறத் துறைகளில் பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்துள்ளனர்.

2012 ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறை சார்பில்  “தமிழ்க் காப்பியங்கள்” என்னும் பொருண்மையிலான தேசியக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு இக்கருத்தரங்கில் ஆய்வாளர்கள் சமர்ப்பித்த  ஆய்வுக் கட்டுரைகள் நூலாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்றுவிக்கும் பாடங்கள்    

தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பண்பாட்டு மானிடவியல், தமிழர் கலையும் பண்பாடும், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புறவியல் கோட்பாடுகள், காப்பியங்கள், ஒப்பீட்டு நோக்கில் உலகச் செம்மொழிகள், மனித உரிமைகள், பெரியாரியல், அகராதியியல், கல்வெட்டியல், திறனாய்வுக் கோட்பாடுகள், ஒப்பிலக்கியம் முதலிய பாடங்கள்  முதுகலைத் தமிழ் மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கற்றுத் தரப்படுகிறது.

பயிற்றுவிக்கும் முறை

 • வகுப்பறையில் மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வகையில் கற்பித்தல்.
 • மாணவர் கருத்தரங்குகள், ஆசிரியர் கருத்தரங்குகள் மற்றும் வகுப்பறை விவாதங்களை நிகழ்த்துதல்.
 • நவீனத் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு பாடங்களைத் தெளிவுப்படுத்துதல்.
   

அதியன் தமிழ்மன்றம்

அதியன் தமிழ் மன்றம் வாயிலாக முதுகலைத்  தமிழ்ப்பாடம்  பயிலும் மாணவர்களுக்கும், மொழிப்பாடம் பயிலும் மாணவர்களுக்கும், சிறப்புச் சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து சொற்பொழிவாற்றுதல் வாயிலாக மாணவர்கள் பரந்த அறிவினைப் பெறுகின்றனர். மாணவர்களுக்குக் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மிகச்சிறப்பாக  ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் விழா நடத்தப்படுவதோடு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆய்வுப்பணிகள்

 • பன்னாட்டு தேசியக் கருத்தரங்குகளில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தளித்தல்.
 • பேராசிரியர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாணவர்கள் தமது முதுகலை ஆய்வேட்டினைத் தரமாகத் தயாரித்து வழங்குதல்.
 • மாணவர்கள் திறனாய்வுக் கோட்பாட்டின் படி புத்தக விமர்சனம் செய்தல்.

ஆய்வுக் களங்கள்

 • பல்வேறு பகுப்புகளுக்குட்பட்ட தமிழிலக்கியங்களின் அனைத்துப் பகுதிகளும் ஆய்வுக் களங்களாகக் கொள்ளப்படுகின்றன.

 

Get in touch with us!

Visitor Count: web
analytics

DBC Success

Specialized Seminars

Site Map